(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

முஹம்மது சாணக்கியன் எனவும் வன்னியில் யுத்தத்தில் இறந்த மக்களின் நகைகளை திருடிய சுமந்திரன் எம்.பி என  .பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் கூறிய விமர்சனத்தினால் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் 17 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17)  இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம்  நாள் விவாதத்தில் ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் உரையாற்றியபோது, அவர் வழக்கம் போலவே  தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை கடுமையாக சாடியும் விமர்சித்தும் பேசிக்கொண்டிருந்தார்.

இதன்போது தமிழ்நாட்டில் உள்ள சீமான் போன்று தமிழினத்தை வைத்து ஆமைக்கறி,பூனைக்கறி,கதைசொல்லி தமிழ் மக்களை வைத்து,தமிழ் மக்களின் துன்பத்தை வைத்து பிழைப்பு நடத்துவதுபோல் சுமந்திரன் உருவெடுத்துள்ளார். இலங்கையின் சீமான் அதாவது தமிழர்களின் சீமான் என்றுதான் அவரை சொல்ல வேண்டும். விளைந்த நெல் வயலுக்குள் மாட்டை இறக்கி உழ வைக்கின்றார். 

பொங்கல் பொங்கும் போது பானையில் சுற்றிக்கட்டப்படும் மாவிலை கருகி இருக்கும்.அல்லது வாடியிருக்கும். ஆனால் சுமந்திரன் பொங்கிய பொங்கல் பானையில் உள்ள மாவிலை அப்படியே  குளிர்மையாக இருக்கின்றது. ஏன் இந்த பித்தலாட்டம்?

அடுத்தது எமது முஹம்மது சாணக்கியன். மன்னிக்கவும் இராசமாணிக்கம் சாணக்கியன். அவரை முஹம்மது என்றே வந்துவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் ஓய்வூதியம் என்று அவர்  கேட்கின்றார்.நல்ல விடயம் அதேவேளை நான் முஹம்மது சாணக்கியனுக்கு சொல்வது என்னவென்றால் உங்களுக்கு வழங்கப்பட்ட அரச சலுகைகள் ,பாராளுமனத்தில் வழங்கப்படும் உயர்தர உணவை,  உங்கள் சம்பளத்தை நிறுத்த வேண்டும் என்றார்.

இதன்போது  ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் :- சபையில் இல்லாத உறுப்பினர் இராசமாணிக்கம் இராஜபுத்திர  சாணக்கியனின் பெயரை முஹம்மது சாணக்கியன் என பெயரை மாற்றி இவர் சொல்கின்றார் என்றால் இவர் ஒரு கீழ்த்தரமான பாராளுமன்ற உறுப்பினர். எந்த தகுதியும் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்.

இவரின் கருத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும். சாணக்கியனின் பெயரை மாற்றுவது பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு முரணானது. படிக்காத முட்டாளான இந்த பாராளுமன்ற உறுப்பினரை முதலில் திருத்துவதற்கு முயற்சியுங்கள் என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய திலீபன் எம்.பி:- நாங்கள்  படிக்காத முட்டாளாகவே இருக்கட்டும். வன்னியில் இறந்த பிணங்களில் உள்ள நகைகளை களவெடுத்துக்கொண்டு வந்தவர்தான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வர தகுதியில்லாத மனிதன்.

செஞ்சசோலையை புலிகளின் பயிற்சி பட்டறை என்று காட்டிக்கொடுத்து கொன்றவர் இந்த ஸ்ரீதரன் என்றார். இதன்போது திலீபன் எம்.பி.யால்  சபைக்குதவாத வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டன.

சபைக்கு தலைமைதாங்கிய வீர சுமன வீரசினாக்   சாணக்கியனின்  பெயரை மாற்றிக்கூறிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.