நாட்டில் நேற்று  (16.11.2021) கொரோனா தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 13 ஆண்களும், 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்  02 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 ஆண்களும் 10 பெண்களுமாக 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14.057 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று  மாலை வரை 532 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 553 526 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 525  188 பேர் குணமடைந்துள்ளனர். 14 304 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.