(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
காணாமல்போன தமது உறவுகளுக்காக கடந்த 12 வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் அவர்களுக்கான நீதியோ நியாயமோ இன்றுவரை கிடைக்கவில்லை, மாறாக பணத்தை வழங்குவதில் எந்த நியாயமும் இல்லை எனக் கூறிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மரண சான்றிதழ் வழங்குவேன் என இந்த நாட்டின் ஜனாதிபதி கூறியுள்ளதன் மூலம் இவ்வாறு காணாமல்போன அனைவரும் மரணித்து விட்டார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
![]()
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறிப்பிடத்தக்க அளவாவது இந்த நாட்டில் வாழ முடியாது தத்தளிக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளுக்காக ஒதுக்கியிருக்கலாம்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன தமது உறவுகளுக்காக கடந்த 12 வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவர்களுக்கான நீதியோ நியாயமோ இன்றுவரை கிடைக்கவில்லை.
குறிப்பாக இப்போது மரண சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டால் 25000 ரூபா, 40000ரூபா, 75000 ரூபா,100000 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிதிக்காக எமது காணாமல் போனவர்களின் உறவுகள் போராடவில்லை. தமது காணாமல் போன உறவுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகின்றனர்.தமக்கு ஏற்பட்ட இழப்பு தமது அடுத்த சந்ததிக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே போராடுகின்றனர்.
ஐ.நா. வினால் இந்த அரசாங்கத்திற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததன். குறிப்பாக 30/1தீர்மானம்,34/1 தீர்மானம் ,40/1 தீர்மானம்,46/1 தீர்மானம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இதனை ஏற்று எந்தப்பணியையும் செய்யும் நிலையில் அரசு இல்லை. உள்ளகப்பொறிமுறை மூலமே தீர்வு என்கின்றது. கடந்த 12 வருடங்களில் உள்ளக பொறிமுறையால் ஏதாவது ஒரு நல்ல விடயமாவது நடந்துள்ளதா?காணாமல் போனவர்களின் உறவுகளுக்காவது நல்ல விடயம் நடந்துள்ளதா?எதுவுமே நடக்கவில்லை.
இந்த நாட்டிலே 1980 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 80000 முதல் 100000 பேர்வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு 146700 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
70 ஆண்டுகளாக எமது இனம் சந்தித்த இழப்புக்கள் எந்த அரசினாலும் ஈடுசெய்ய முடியாதவை.ஐ.நா. அமர்வில் காணாமல் போன அனைவருக்கும் நான் மரண சான்றிதழ் வழங்குவேன் என இந்த நாட்டின் ஜனாதிபதி ஒரு கருத்தைக்கூறியுள்ளார்.
அப்படியானால் காணாமல்போன அனைவரும் மரணித்து விட்டார்களா? எமது சமூகம் சலுகைகளுக்கு சோரம்போன சமூகம் அல்ல. தமது உரிமைக்காக போராடுகின்ற இனம் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM