வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு ; இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை!

Published By: Digital Desk 3

17 Nov, 2021 | 01:18 PM
image

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். 

வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. 

அந்நிலையில் 14ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவி இழக்க நேரிடும். 

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்  தவிசாளரான  கோணலிங்கம் கருணாந்தராசா (வயது 76) கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். 

அந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. 

அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, சுயேச்சை குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அந்நிலையில் அவர் பதவியேற்று இரண்டு மாத கால பகுதி முடிவுறாத நிலையில் அவரது முதலாவது பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. 14 நாளில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் , அவர் தனது தவிசாளர் பதவியை இழப்பார். என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10
news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 06:34:37
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41