மெக்சிகன் கலைஞரான ஃப்ரிடா கஹ்லோவின் சுய உருவ ஓவியம் செவ்வாயன்று நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 34.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க கலைப்படைப்புக்கு ஏலத்தில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுவாகும்.

இந்த விற்பனையானது ஓவியரின் முந்தைய பொது ஏல சாதனையான 8 மில்லியன் அமெரிக்க டொலர் சாதனையையும் விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

ஓவியர் இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட “Diego y yo” என்ற தலைப்பிலான இந்த ஓவியம், கஹ்லோவின் இறுதி சுய உருவப்படமாக கருதப்படுகிறது.