(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நீரினால் கொரோனா பரவாது என்பது விஞ்ஞானபூர்வமாக நீரூபனமாகியுள்ளதால் இனியாவது கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிங்களின் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துமாறும முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி நேற்று சபையில் கோரினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனது கன்னி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது தொடர்பில் நிதி அமைச்சருக்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம். பொருள் விலை உயர்விற்கு நிரந்தர தீர்வு காண எந்த அரசாங்கத்தினாலும் முடியாவில்லை.
வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பில் விமர்சனம் வந்தது. விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து செயற்பட்டதால் தாக்கம் ஏற்பட்டதாக நிதி அமைச்சர் நேர்மையாக ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
எதிரணி ஆர்ப்பாட்டத்தை தடுக்க நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் வழங்காத நிலையில் வீதிகள் தோறும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பசளை பிரச்சினையால் தொற்று பரவலை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கவாதிகளை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.
முஸ்லிம் மக்களின் பிரதேசங்களை தகனம் செய்யும் முயற்சி ஒருதலைப்பட்டசமாக எடுக்கப்பட்டது.நீரினால் கொரோனா பரவும் என்பது விஞ்ஞானபூர்வமானதல்ல என்பது உறுதியாகியுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு இருநாட்கள் வைத்திருந்து பிரேதங்கள் ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இனியாவது இதனை நிறுத்துங்கள். பிரதமர் ஏற்றுள்ள இந்த விடயத்தை இனியாவது நிறுத்துங்கள். கடந்த காலத்தில் சடலங்களை மாலைதீவிற்கு கொண்டு செல்லவும் யோசனை முன்வைக்கப்பட்டது.
சிறுபான்மையினரை தூரமாக்கும் செயற்பாடுகளை இனியாவது நிறுத்த வேண்டும். ஒருநாடு ஒரு சட்டம் செயலணி தொடர்பில் பிரதமரிடம் வினவிய போது அவர் பதில்வழங்கவில்லை.
பிரதமரோ முக்கிய அமைச்சர்களோ இவ்வாறான விடயங்களை ஆதரிக்கவில்லை. முயற்சியால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? இனியாவது இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM