சவாலான காலகட்டத்திலும் துணிச்சல் மிக்க வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது - நீதி அமைச்சர் அலிசப்ரி

Published By: Digital Desk 3

17 Nov, 2021 | 10:26 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படமுடியாது. என்றாலும் மிகவும் சவாலான காலத்தில் இவ்வாறான வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க துணிச்சல் தேவை அத்துடன் ஐந்து வருடங்களுக்கு மேல்  கைதிகளை சிறையில் அடைத்து வைத்து அவர்களுக்கு உணவு வழங்குவதை விட புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான வழக்கு விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என நீதி அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் நிலைமை காரணமாக அரசாங்கத்தின் வருமான வழிகள் தடைப்பட்டிருக்கின்றன. என்றாலும் எமது ஏற்றுமதி அதிகரித்திருக்கின்றது. மிகவும் சவாலுக்கு மத்தியிலேயே இதனை நாங்கள் செய்துவருகின்றோம். அதனால் மீண்டுமொரு கொவிட் நிலை ஏற்பட்டு நாடு மூடப்படும் நிலை ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு அனைவரதும் கடமை அதனால் அரசியல் நோக்கத்துக்காக செயற்படக்கூடாது. வரவு செலவு திட்டத்தை யாரும் விமர்சிக்க முடியும். ஆனால் யாரும் ஆராேக்கியமான ஆலாேசனைகளை முன்வைப்பதில்லை

அத்துடன் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்டபமுடியாது. அவ்வாறு செய்வதென்றால்  ஐஸ்கிரீம் விற்பனை செய்யவேண்டும் என ஆங்கில பழமொழி ஒன்று இருக்கின்றது. அதனால் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்பிக்க அதற்கு விசேட துணிவு அவசியம். அத்தகைய துணிவுடனேயே அரசாங்கம் இம்முறை சாத்தியமான வரவுசெலவுத் திட்டத்தை முன் வைத்துள்ளது.

அரசத்துறையை நவீனமயப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்  அப்போதுதான்  ஊழல் மோசடிகளில் இருந்து  வெளிவர முடியும். 

நாட்டுக்கான வருமானம், வருமான வரி உள்ளிட்ட வரிகள்,  கலால் வரி, சுங்க வரி போன்றவை மூலமாகவே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அவை அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் நெருக்கடி நிலை நிலவும் நிலையிலேயே மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதித்துறை ஓரளவு முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் சுற்றுலாத் துறை முன்னேற்றத்திற்கு இன்னும் சில காலம் எடுக்கும். இத்தகைய சூழ்நிலை நாட்டின் பொருளாதாரத்தை  முன்னேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரித்து நாட்டை மீண்டும் முடக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என நாம் எதிர்க் கட்சியினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்க்கட்சி ஆளும் கட்சி என அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி நிதியமைச்சர் இம்முறை வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

நாட்டின் முக்கியமான துறைகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவற்றிற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வறுமை ஒழிப்பிற்கும்  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

70 வருடங்களுக்கு பின்னர் நீதித்துறை முன்னேற்றத்தில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் சிக்கல்களை விரைவாக தீர்த்துக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். 

அதேவேளை சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைக்கைதிகளை சிறையில் அடைத்து வைத்து அவர்களுக்கு உணவு வழங்குவதை விட புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான வழக்கு விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04