தமிழ் மொழித் திரைப்படமான ஜெய் பீம், ஹாலிவூட் திரைப்படங்களான தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்ஷன் மற்றும் தி காட்பாதர் போன்ற கிளாசிக் படங்களைத் தாண்டி IMDB இல் பயனர்களால் சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

கடுமையான ஹிந்து சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைக் கதைகளைச் சொல்லும் கடினமான இந்தியத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்திய திரைப்படமான ஜெய் பீம் அமைந்துள்ளது.

ஐ. எம். டி. பி (IMDb) இவ்விணையத்தளம் ஆனது உலக திரைப்படங்களினைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது.

தற்போது ஜெய் பீன் இன் IMDb மதிப்பீடு 9.6 ஆகவும், தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்ஷன் இன் மதிப்பீடு 9.3 ஆகவும், தி காட்பாதர் இன் மதிப்பீடு 9.2 ஆகவும் உள்ளது.

டி ஜெ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ஜெய் பீம். படம் வெளியாகி பல வாரங்கள் ஆகிறது. ஆனால் இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெய் பீம் படத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம், தமிழ் சினிமாவிற்கு சர்வதேச அளவில் கிடைத்த கூடுதல் பெருமை.