(ஏ.என்.ஐ)
எதிரி போர் விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் இருந்து தாக்கும் இந்திய திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, ரஷ்யா எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை இந்தியாவிற்கு வழங்கத் தொடங்கியுள்ளதாக துபாய் விமான கண்காட்சியில் ரஷ்ய இராணுவ -தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இயக்குனர் டிமிட்ரி ஷுகேவ் உறுதியளித்திருந்தார்.
வான் பாதுகாப்பு அமைப்பின் பகுதிகள் இந்தியாவை அடையத் தொடங்கியுள்ளன, அவை முதலில் மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள இடத்தில் நிறுத்தப்படும். அங்கு இருந்து மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் பாகிஸ்தான் - சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா ரஷ்யாவுடன் கைச்சாத்திட்டுள்ளது. மேலும் 400 கிமீ வரையிலான வான் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்தியாவுக்கு ஐந்து பாதுகாப்பு கட்டமைப்புகள் வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் கட்டமைப்பு வழங்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவினர் ரஷ்யாவில் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த வான் பாதுகாப்பு அமைப்பு தெற்காசியாவில் இந்தியாவுக்கு ஒரு விளிம்பைக் கொடுக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியா எதிரி விமானங்களையும் கப்பல் ஏவுகணைகளையும் 400 கிமீ தூரத்தில் இருந்து தாக்க முடியும், எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM