வடமாகாணத்தின் ஏ-9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்கார விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.

 இதன்படி, வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிரிவுகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் பணி முடியும் வரை ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடையள  பலகைகள் வைக்கவேண்டும்.

இப்பணியை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை  வட மாகாணத்தில் ஐனவரி மாதம்  ஒக்டோபர் 31 வரையான காலப்பகுதியில் 128 மரண வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேர் பலத்த காயங்கள் மற்றும் 308 சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வாகனம் செலுத்துவதங்கு முன் பொதுமக்கள் கவனமாக இருக்கவும், எப்போதும் சீட் பெல்ட் அணியவும், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும், சரியான பாதை வேக வரம்புகளை உறுதி செய்யவும், சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் எள  சாரதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.