உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைக்கு திகதி அறிவிப்பு

By T Yuwaraj

16 Nov, 2021 | 09:36 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க   தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்கள் மீதான விசாரணைகளுக்கும் இன்று உயர் நீதிமன்றம் திகதி அறிவித்தது.

Articles Tagged Under: உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்  | Virakesari.lk

நாட்டில் நிலவிய கொரோனா நிலைமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வந்த இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், இன்று (16) பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையிலான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துறைராஜா, காமினி அமரசேகர   ஆகிய  7 நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

 இதன்போது நீதியரசர்களான  பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர்  தனிப்பட்ட காரணிகளுக்கக இந்த மனுக்கள் மீதான விசாரணைகளிலிருந்து விலகிக்கொள்வதாக திறந்த மன்றில் அறிவித்தனர்.

 இதனையடுத்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான  விசாரணைகளை அடுத்த வருடம் மார்ச் 15,16,17 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுப்பதாக  பிரதம நீதியரசர் அறிவித்தார்.

21/4 தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன,  சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார்,  ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி  மோதித்த ஏக்கநாயக்க உள்ளிட்ட 12 பேர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் பொறுப்புக் கூறத்தக்க தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள்  பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன,  தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ்,  மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right