ஹூங்கம – கிவுல பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வயல் நிலத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தங்கல்ல பொலிஸார், கடற்படை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.