கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஜடாயுமங்கலம் என்ற இடத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் பறவைகளுக்கான அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிய சிறிய மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

அத்தோடு சுற்றுலாப்பயணிகள் மலை ஏறுதலில் ஈடுபடும் வகையிலும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பறவை ஜடாயுவின் சிலை 200 அடி நீளத்திலும், 150 அடி அகலத்திலும், 70 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு செல்லும் போது, வழிமறித்த ஜடாயு பறவை அவருடன் போரிட்ட நிலையில், இராவணனால் வீழ்த்தப்பட்டு, இறுதியாக தரையில் விழுந்து உயிரிழந்தது.

ஜடாயுவின் இத் தியா கத்தை போற்றும் வகையில், அதே வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கேரள சுற்றுலாத்துறை கூறியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இப்பூங்கா திறக்கப்ப டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.