நிதி அமைச்சர் பசில் அரச உத்தியோகத்தர்களை சுமையென்று கூறவில்லை - அமைச்சர் டலஸ் விளக்கம்

Published By: Gayathri

16 Nov, 2021 | 09:29 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியல் தீர்மானங்களுக்காக விருப்பத்தின் பேரில் அரச சேவையில் உத்தியோகத்தர்கன் குவிக்கப்பட்டுள்ளமை பாரிய குறைபாடாகும் என்பதை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். 

மாறாக அரச உத்தியோகத்தர்களை சுமையென்று கூறவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை(16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,  

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரச உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு சுமை என்று கூறவில்லை. '

அரசியல் தீர்மானங்களுக்காக விருப்பத்தின் பேரில் அரச சேவையில் உத்தியோகத்தர்கன் குவிக்கப்பட்டுள்ளனர்' என்பதையே நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இது ஒவ்வொரு அரசாங்கத்திலும் காணப்படும் பாரிய குறைபாடாகும். எனவேதான் அரச நிறுவனங்கள் சில நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

கோப் அறிக்கைகள் ஊடாக இதனை தெளிவாக அவதானிக்கலாம். இந்த சுமையைப் பற்றியே நிதி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வழங்குவதே இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் காணப்பட்ட பாரிய சிக்கலாகும். 

உண்மையில் இதனை சம்பள அதிகரிப்பு என்று கூற முடியாது. எவ்வாறிருப்பினும் பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்த வரலாற்று குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிதி நெருக்கடிகள் சீராகும்போது அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27