சதீஷ் கிருஷ்ணபிள்ளை
2019இல் சீனா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று நகரங்களுக்கு சென்றேன். நவீன சீனாவின் சர்வதேச முகமாக பரிணமிக்கும் ஷங்ஹாய், பாரம்பரியங்களைப் பேணிக் காக்கும் தலைநகர் பெய்ஜிங், பண்டைய சீனாவின் பட்டுப்பாதை கடல் பயணங்கள் ஆரம்பமான கிழக்குப் பிராந்திய துறைமுக நகர் என்பன அவையாகும்.
இவை கம்யூனிஸ சீனாவின் சமகால வளர்ச்சியை மூன்று கட்டங்களாக பிரதிபலிக்கும் நகரங்கள். இவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு பொதுமைத் தன்மையைக் கண்டோம். வீடுகளிலும், அரச அலுவலகங்களிலும் காணப்படும் பெருந்தலைவர் மாவோ சேதுங்கின் படம். மக்கள் அவரை கடவுள் அந்தஸ்தில் வைத்துப் பார்க்கின்றார்கள் என்பதை உணர முடிகிறது.
சில வீடுகளில் இன்னொரு படமும் கூடவே மாட்டப்பட்டிருந்தது. அது சமகால ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் படம். பெருந்தலைவர் மாவோ அளவிற்கு ஷி முக்கியமானவரா என்று கேட்டோம். அவர்கள் பதில் சொன்னார்கள். அது இருக்கட்டும். பிறகு பார்ப்போம்.
இவ்வாரம் சீனாவில் முக்கியமானதொரு கூட்டம் நடந்தது. சீன கம்யூனிஸ கட்சியின் மத்திய குழு கூட்டம். வருடாந்தக் கூட்டம். இதில் கட்சியின் உயர் பதவியில் உள்ளவர்கள் மாத்திரம் கலந்து கொள்வார்கள். சுமார் 370 முதல் 400 பேர் வரை பங்கேற்கலாம். வெளியாருக்கு அனுமதி கிடையாது. முக்கியமான தீர்மானங்கள் எட்டப்படும். ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பற்றிய தீர்மானங்களும் அதில் அடக்கம்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-32
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM