இலங்கைத் தமிழரசுக்கட்சியின்தலைமைப்பதவி உட்பட முக்கிய பதவி நிலைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான காய்நகர்த்தல்கள்ஆரம்பமாகியிருக்கின்றன.

அதன்பிரகாரம் புதிய தலைவராகபொன்.செல்வராசா நியமிப்பதற்கும் செயலாளராக குலநாயகத்தினை நியமிப்பதற்கும் நகர்வுகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் பீடத்தில் சாள்ஸ் நிர்மலநாதனையும், சாணக்கியனையும் உள்ளீர்ப்பதற்கும் முஸ்தீபு செய்யப்படுகின்றது.

மேலும், தேசிய பட்டியல்பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கலையரசன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சித்தலைவர்மாவை.சோ.சேனாதிராசாவுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டு அவருக்கு அம்பாறை, திருகோணமலைமாவட்டங்களை  கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நகர்வின் மூலமாக, ரெலோ,புளொட், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவைப் பயன்படுத்தி கட்சிக்குள்ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கும், பொதுவெளியில் கட்சியின் பெயருக்கு ஏற்படும் களங்கத்திற்கும்‘செக்’ வைக்க முடியும் என்று கருதும் தமிழரசுக்கட்சியின் அணியொன்றே காய்நகர்த்தலை முன்னெடுத்துள்ளது.

அதேநேரம், மாவைக்கு ‘எம்.பி’பதவியை வழங்கி கிழக்கிற்கு அனுப்புவதன் ஊடாக கட்சியின் தலைமையிலிருந்து அவரைப் ‘பெயர்த்தெடுப்பதற்கு’இதுவே உரிய உபாயம் என்றும் தமிழரசுக்கட்சிக்குள் குறித்த அணியினர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதோடு,இதன்மூலம் அடுத்த ‘வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற மாவையின் ‘கிடுக்குப் பிடிக்கு’நிரந்தர முற்றுப்புள்ளியை வைக்க முடியும் என்றும் அந்த அணியினர் கணிக்கின்றார்கள்.

அண்மைக்காலமாக, ரெலோவின்முன்னெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள ஏனைய கட்சிகளுடன் ஒருங்கிணைந்தசெயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, 13ஆவது திருத்தம் உள்ளிட்ட சில விடயங்களில்முன்னெடுக்கப்பட்டு கணிசமான வெற்றியும் காணப்பட்டுள்ளது. 

இந்தச் செயற்பாடுகள் எதிர்காலத்தில்தமிழரசுக்கட்சியை தவிர்த்து அல்லது தமிழரசுக்கட்சியை இரண்டாக உடைத்து புதியதொரு கூட்டைதோற்றுவிக்கும் நிலைமையை ஏற்படுத்தி விடலாம் என்ற அச்சமும் அண்மைய காலத்தில் தமிழரசுக்கட்சிக்குள்ஏற்பட்டிருக்கின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-29

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/