இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவராக ரஞ்சனி ஜயக்கொடி

By Gayathri

16 Nov, 2021 | 05:03 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தலைவர் பதவியில் போட்டியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரான கோக்கிலா குணவர்தன தேர்தலை நிராகரித்து சென்றதன் காரணமாக  இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவராக ரஞ்சனி ஜயக்கொடி போட்டியின்றி தெரிவானார்.

சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான செயலாளராக கடமையாற்றும் ரஞ்சனி ஜயக்கொடி,  விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத் தேர்தலின்போது, தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரான  கோக்கிலா குணவர்தன மற்றும் ஆதரவு தெரிவித்திருந்த மாவட்ட மற்றும் இணைச் சங்கங்கள் தேர்தலிலிருந்து விலகிச் சென்றனர். 

இந்நிலையில், மாவட்ட மற்றும் இணைச் சங்கங்கள் 17 இன் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலின் ஊடாக இந்த தேர்தல் நேற்று நடைபெற்றிருந்தது.

புதிய தலைவராக தெரிவான ரஞ்சனி ஜெயக்கொடி அரச சேவை மற்றும் மாத்தளை மாவட்ட சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த தேர்தலில் களமிறங்கியிருந்து சங்கத்தின் புதிய தலைவராக தெரிவானார்.

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளராக குமுதினி கோமஸும், பொருளாளராக சஞ்சீவனி வனசிங்கவும்,  உப தலைவராக எஸ்.அமிதாவும், உப பொருளாளராக வி. சுமித்ராவும் தெரிவாகினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right