(எம்.மனோசித்ரா)
சீன உரக்கப்பலால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அக்கப்பலில் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாகவோ இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை.
நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளமையின் காரணமாகவே சீனக்கப்பல் திரும்பிச் செல்லாமலுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களாக டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில் ,
சீன இரசாயன உரக்கப்பல் பிரச்சினையால் இலங்கை - சீனாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர முரண்பாடும் ஏற்படாது. இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் மிகவும் தெளிவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எனினும் நாம் கடன் சான்று பத்திரத்தை விடுவித்துள்ளமையால் இவ்விடயத்தில் தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படுகின்றன.
இந்த சிக்கலுக்கான தீர்வு காணப்படும் வரை மாத்திரமே கப்பல் இலங்கையில் தரித்துள்ளதே தவிர , வேறெந்த நோக்கத்திற்காகவும் கிடையாது.
குறித்த உரத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெறப்போவதில்லை என்றும் விவசாயத்துறை அமைச்சர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு ஆயுதக் கப்பல் இல்லை என்பதால் அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என்றார்.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
இவ்விடயம் தொடர்பில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் கடன்சான்று பத்திரத்தை விடுவித்துள்ளமையால் உரத்தினை பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த நிறுவனம் உள்ளது.
அதே போன்று விவசாயத்துறை அமைச்சு அதனை பொறுப்பேற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளது.
இரு தரப்பும் தமது நிலைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளன. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் இலங்கையில் தரித்திருக்கலாம் என்ற நிலைப்பாட்டில் அந்நிறுவனம் கப்பலை மீள வரவழைக்காதிருக்கலாம்.
கப்பலை திரும்பி செல்லுமாறு தீர்ப்பு வரக்கூடும் என்று நாம் எதிர்பார்ப்பதைப் போலவே, அதற்கு எதிர்மாறான தீர்ப்பை அந்நிறுவனம் எதிர்பார்த்திருக்கலாம்.
எவ்வாறிருப்பினும் இந்த கப்பல் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. உரம் கசிவடைந்து கடற்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவோ , கப்பலுக்குள் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாகவோ இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM