(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் சுயநலமாக சிந்திக்கக் கூடாது. பொதுநலமாக சிந்திக்கவேண்டும்.
நாட்டை குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி செய்யும் வகையில் நிதியமைச்சர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன அவ்வாறான பின்னணியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
நாட்டை அபிவிருத்தி செய்வோம் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். கொவிட் தாக்கத்தின் காரணமாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது இருப்பினும் கொவிட் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் திட்டத்தில் அரசாங்கம் வெற்றியமைடைந்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தலில் இலங்கை தென்னாசிய வலய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னிலையில் உள்ளது. அத்துடன் உலக சுகாதார தாபனம் இலங்கை கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளோம் என பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்ள முடியும்.
வரவு-செலவு திட்டம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் சுயநலமாக சிந்திக்கக் கூடாது.
பொதுநலமாக சிந்திக்கவேண்டும். குறுகிய காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM