கார்வண்ணன்

அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், போராட்டங்களுக்கு மத்தியில், பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2019 நவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து, அவர் எதிர்பாராத பெரும் வெற்றியைப் பெற்றிருந்தார்.

69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 19ஆம் திகதி அனுராதபுரவில் பதவியைப் பொறுப்பேற்று, இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.

சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் தெரிவு செய்யப்பட்டவர் என்ற அடையாளத்துடன் ஜனாதிபதியாகிய அவரைச் சுற்றி மிகப் பெரியதொரு விம்பம் உருவாக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வென்றவர் என சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை அவரை உச்சிக்கு இழுத்துச் சென்றது.

ஆனால், அந்த உச்சநிலையை சமாளிக்க முடியாமல் திணறுகின்ற நிலையைத் தான், இரண்டு ஆண்டுகளிலும் அவதானிக்க முடிகிறது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்கு கடும்போக்கு சிங்களத் தேசியவாதிகளும், இடதுசாரிகளும் கைகோர்த்துச் செயற்பட்டனர்.

தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, உள்ளிட்ட கடும்போக்கு தேசியவாத சக்திகள், அவரை விட்டால், வேறு எவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-28

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/