(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
2021 ஆம் ஆண்டு முழுவதற்கும் தேநீர் மற்றும் விருந்துபசார செலவுகளுக்காக ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 541 ரூபாவே செலவாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாவை தேநீருக்காக செலவளித்தேன் என கூறுவது முழுப்பொய் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, அமைச்சர் பந்துல குணவர்தனவின் அமைச்சு விவகாரம் மற்றும் தேநீர் செலவுகள் குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் செவ்வாய்க்கிழமை(16) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் தனது நிலைப்பாட்டை முன்வைக்கையில் கூறியதானது,
என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சின் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மாதாந்த கூலியை விடவும் குறைவான கூலியையே நாம் செலுத்தி வருகின்றோம். அதுமட்டுமல்ல, எனது அமைச்சு சர்வதேச தூதுவர்கள், இராஜதந்திரிகள், வியாபாரிகளுடன் தொடர்புபட்டது.
தொடர்ச்சியாக அவர்கள் எமது அலுவலகத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வேளையில் தேநீர் விருந்துகளை நடத்துவது சாதாரணமான ஒரு விடயமாகும்.
அதுமட்டுமல்ல சந்திப்புகளின் போது தேநீர் விருந்துகளுக்காக அமைச்சு நிதியில் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் 2021 ஆம் ஆண்டு முழுவதற்கும் விருந்துபசார செலவுகளுக்காக ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 541 ரூபாவாகும். ஆகவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடவும் குறைவான தொகையே செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடிக்கணக்கான ரூபாவை தேநீருக்காக செலவழித்தேன் என கூறுவதன் காரணம் என்னவென எனக்கும் விளங்கவில்லை.
அதுமட்டுமல்ல யுத்த காலத்தில் எனக்கு கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவை "நமக்காக நாம்" அமைப்பிற்கு யுத்த செலவுகளுக்கு வழங்கினேன்.
எனது தாயார் உயிரிழந்த பின்னர் "எமது தாய்" அமைப்பிற்கு மாதாந்த கொடுப்பனவுகள் செல்கின்றன. இவ்வாறு பல காரணிகளை கூற முடியும்.
ஆனால் மிக மோசமாக பொய்களை கூறி எனது சுய கௌரவத்தை நாசமாக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொள்வது கீழ்த்தரமான விடயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM