(எம்.மனோசித்ரா)

டொலர் நெருக்கடிக்கான தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அமைச்சரவையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்ட போதிலும் , இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கோத்தாபய 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை : உதய  கம்மன்பில | Virakesari.lk

செவ்வாய்க்கிழமை (16)  இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

நாட்டில் காணப்படுகின்ற டொலர் நெருக்கடிக்கான தீர்வினை எதிர்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா என்பது தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. அமைச்சர்கள் பலரும் நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.

இதன் போது சர்வதேச நாணய நிதியத்திடம் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டால் ஏற்படும் நன்மை , தீமைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. எனினும் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.