யாழ். பல்கலைக்கழகத்தின்  வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பூவரசன்குளம் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.