அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள பிரதி உதவிச்செயலாளருக்கும் வெளிவிவகாரச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

By Gayathri

16 Nov, 2021 | 01:18 PM
image

(நா.தனுஜா)

உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங்கிற்கும் வெளிவிவகாரச்செயலாளர் ஜயநாத் கொலம்பகேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  இலங்கைக்கு வருகைதந்திருப்பதுடன் இதன்போது அவர் நாட்டின் உயர்மட்டத்தலைவர்கள் பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார் என்று அமெரிக்கத்தூதரகம் அறிவித்திருந்தது.

 

அதன்பிரகாரம் நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை சந்தித்துள்ள கெல்லி கெய்டர்லிங், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ளார். 

அதுமாத்திரமன்றி இதன்மூலம் அபிவிருத்தி செயற்றிட்டங்கள், இருநாடுகளினதும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள், கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலின் பின்னரான மீட்சி ஆகிய விடயங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right