பேஸ்புக் பார்த்தால் தன்னை கன்னத்தில் அறைவதற்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார் தொழிலதிபரான மணீஷ்சேத்தி என்பவர்.

இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் ஆவார்.

பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்திவரும் மணீஷ்சேத்தி, தான் பேஸ்புக் பார்ப்பதை தடுப்பதற்காக காரா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இந்தப் பெண்ணின் வேலை மணீஷ்சேத்தி பேஸ்புக் பார்க்கும் பொழுதெல்லாம் அவரை கன்னத்தில் அறைவது ஆகும்.

இதனால் அவரது நிறுவனத்தின் உற்பத்தியானது பல மடங்கு உயர்ந்துள்ளதாக சேத்தி தெரிவித்திருந்தார். 

சேத்தியின் ட்வீட்டைக் கண்டு ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது இணையத்தில் அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.