வணிக பொருட்களின் வர்த்தக பற்றாக்குறை செப்டெம்பரில் 495 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவு

By Vishnu

16 Nov, 2021 | 10:31 AM
image

2020 செப்டெம்பரில் 525 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வணிக பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 2021 செப்டெம்பரில் 495 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக 2021 இல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சிய பெறுமதிகளைத் தொடர்ந்தும் பதிவுசெய்துள்ளது.

அதேவேளை இறக்குமதிச் செலவினம் 2020 செப்டெம்பரில் பதிவுசெய்யப்பட்ட அதே மட்டத்தில் காணப்பட்டது. 

சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தன. 

2021 செப்டெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மிதமான போக்கொன்று அவதானிக்கப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தான கூட்டுக்கடன் வசதியின் பெறுகைகளினதும் இலங்கை மத்திய வங்கிக்கும் வங்காளதேச வங்கிக்கும் இடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் எஞ்சியுள்ள பெறுகைகளினதும் கிடைப்பனவுகளுடன் வலுவடைந்து காணப்பட்டது. 

அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடி செலாவணி வீதம் மத்திய வங்கியினால் அத்தியாவசிய இறக்குமதிகளின் தேங்கியுள்ள கப்பற்சரக்குகளை விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செலாவணி வீதம் தொடர்பிலான வழிகாட்டல்களுடனும் இம்மாத காலப்பகுதியில் உயர்வடைந்தும் நிலைப்படுத்தப்பட்டும் காணப்பட்டது என்றும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right