சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 82,366 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்யை தினம் மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத 392 பயணிகள் பஸ்கள் மற்றும் 95 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநரேம் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 558 வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

436 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை மேல் மாகாணத்தில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 997 பயணிகள் பஸ்கள், 238 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 1276 விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.