(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போதுள்ள நிலைமையை புதிய அலையின் ஆரம்பம் என்று திடீரெனக் கூற முடியாது. எனினும் அவ்வாறு ஏற்படாது என்றும் உறுதியாகக் கூற முடியாது.
எனவே தற்போது சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்தால் எதிர்வரும் 10 - 15 நாட்களில் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
![]()
இதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரேயொரு விடயம் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதாகும். அவ்வாறில்லை என்றால் இதனை விடவும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதுள்ள நிலைமையை புதிய அலையின் ஆரம்பம் என்று திடீரெனக் கூற முடியாது. எனினும் அவ்வாறு ஏற்படாது என்றும் உறுதியாகக் கூற முடியாது.
காரணம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட எமது நடத்தையின் பிரதி பலனாகவே தற்போதைய நிலைமை காணப்படுகிறது. அதே போன்று தற்போதைய நடத்தைகளின் பிரதி பலனை எதிர்வரும் 10 - 15 நாட்களின் பின்னரே அவதானிக்க முடியும்.
அதற்கமைய கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள தொற்றாளர் அதிகரிப்பை தற்போது எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தற்போது சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்தால் எதிர்வரும் 10 - 15 நாட்களில் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
இதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரேயொரு விடயம் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதாகும். அவ்வாறில்லை என்றால் இதனை விடவும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே சுகாதார விதிமுறைகள் எம்மால் வெளியிடப்படுகின்றன. எனவே அறிவுள்ள மக்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது பொறுப்புள்ள பிரஜைகளின் கடமையாகும். சமூகத்தில் அடையாளங்காணப்படாமல் உள்ள தொற்றாளர்களை இனங்காண்பதற்கான எழுமாற்று பரிசோதனைகள் முன்னரைப் போலவே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன.
மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்காக வைத்தியசாலை கட்டமைப்புக்கள் தயார் நிலையிலுள்ளன. எவ்வாறிருப்பினும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை ஏதேனுமொரு வகையில் கட்டுப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாகும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM