அருட்தந்தை சிறில் காமினியிடம் 7 மணித்தியால வாக்குமூலம் பதிவு

By T Yuwaraj

15 Nov, 2021 | 08:35 PM
image

(எம். எம்.சில்வெஸ்டர் )

குற்றவியல்  விசாரணை திணைக்களத்துக்கு இன்றைய தினம் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அருட் தந்தை  சிறில் காமினி அடிகளாரிடம் 7  மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் குற்றவியல் விசாரணை அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், இன்னும் சிறியப் பகுதியொன்று வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதால் நாளைய தினமும் காலை 9.30 மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (சி.ஐ.டி) வரும்படி குற்றவியல் விசாரணை அதிகாரிகள்  அழைத்துள்ளனர். 

Image

ஜனாதிபதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை  செயற்பட்டுத்துவது சட்ட மா அதிபரிடம் கடமையும் பொறுப்புமாகும். அவற்றை துரித கதியில் செயற்படுத்த வேண்டியது அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

எனினும்,  ஜனாதிபதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மிகவும் சிறியளவிலேயே  செயற்படுத்தப்பபட்டுள்ளது. செயற்படுத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு செயற்படுத்தினால் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்கலாம்.

'வெபினார் ' (இணையத்தள சந்திப்பு) இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றின் போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அருட் தந்தை சிறில் காமினி அதிகளாரால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக இன்றைய தினம் (15) குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (சி. ஐ. டி ) அழைக்கப்பட்டிருந்தார்.

Image

காலை 9.45 மணியளவில் சி. ஐ. டி. க்கு சட்டத்தரணிகள் மூவருடன் அருட் தந்தை சிறில் காமினி வருகை தருவதற்கு முன்னரிருந்து வெளியே வரும் வரையில் 50 க்கும் அதிகமான  அருட் தந்தையர்கள் சிலரும் அருட் தந்தை சிறில் காமினிக்கு ஆதரவு தெரிவித்து சி. ஐ. டி. க்கு முன்பாக அணித்திரண்டிருந்தனர்.

அவர்கள் இன்றைய தினத்துக்கு வாக்கு மூலமொன்றை பெற்று முடித்தனர். இன்னும் சிறிய பகுதியொன்று எஞ்சியுள்ளதனால் நாளைய தினம் காலை 9.30 மணிக்கு வரும்படி குற்றவியல் விசாரணை அதிகாரிகள்  என்னை அழைத்துள்ளனர்.

பிரச்சினை எதுவும் இல்லை.அவர்கள் மிகவும் சிநேகமபூர்வமாக அங்கிருந்த சகல அதிகாரிகளும் நடந்து கொண்டனர். எமது சட்டத்தரணியை உள்ளே வர அனுமதித்ததுடன், எனது அருகிலேயே அவர் அமர்ந்திருந்தார். என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்ப்போம்.     

"இன்று நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நீங்களும் அதிகளவான தகவல்களை சி.ஐ.டி.யினருக்கு கூறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். இவ்வளவு காலம் ஏன் இந்த விடயங்கள் குறித்த தரப்பினர்களிடம்  செல்லவில்லை? என ஊடகவியளாலர் ஒருவர் கேட்டபோது,

இன்றைய தினம்  அதிகளவான நேரம் சென்றதற்கு 'வெபினார் ' இல்  நான் கூறியிருந்த பதிலை, பதிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் கேள்விகள் மாத்திரமே கேட்டிருந்தனர். உண்மையிலேயே எம்மிடம் உள்ள தகவல்களும் எதுவும் அளிக்கப்படவில்லை. நான் அந்த கலந்துரையாடலில் தெரிவித்திருந்த சகல பதில்களும்  ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும், பாராளுமன்ற விசேட செயற்குழு அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக்  கொண்டவையாகும். 

Image

ஆகவே, அந்த இரண்டு அறிக்கைகள் குறித்து பொதுவாகவே எல்லோருக்கும்  தெரிந்தவையாகும். அது குறித்து நாம் சி.ஐ.டி.யினருக்கு கூறத் தேவையில்லை. ஜனாதிபதியால்  சட்ட மா அதிபருக்கு பொறுப்பாக கொடுக்கப்பட்ட விடயமாகும். பாராளுமன்ற விசேட செயற்குழு அறிக்கையானது, பாராளுமன்றுக்கு பொறுப்பாக கொடுக்கப்பட்ட விடயமாகும். 

இவ்வாறு பொதுவெளியில் தெரியவந்திருந்ததும் மற்றும் ஆணைக்குழுவினால் ,தேடிப்பார்த்து சாட்சி, விசாரணைகளை நடத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்தாமையே காரணம் ஆகும்.

அது சட்ட மா அதிபரின் கீழ் உள்ள விடயமாகும். நான் நினைக்கிறேன், சட்ட மா அதிபரிம் இதை விடவும் பொறுப்பாக செயற்பட வேண்டும். சட்ட மா அதிபருக்கு இவ்விடயங்கள் பொறுப்பளிக்கபட்டுள்ளமையானது, அவற்றை செயற்படுத்தக் கூறியே அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், மிகவும் குறைந்த அளவிலேயே  அவற்றை செயற்படுத்துகின்றார்.  மிகவும் சிறிய அளவிலேயே செயற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை செயற்படுத்தக் ‍ கோரியே  நாம் கேட்டுக்கொள்கி‍றோம்." என பதிலளித்தார். 

தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து கூறப்பட்டு வருகிறது. எனினும், இதன் பிரதான சூத்திரதாரியை ஏன் எவரும் வெளியிடாமல் இருக்கின்றனர்? என கேட்டதற்கு பதிலளித்த அருட் தந்தை சிறில் காமினி, 

இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் தேடிப்பார்த்து கண்டுப்பிடித்து வெளியிட வேண்டும். அது எங்களது வேலையல்ல.  இந்நாட்டில் அதற்கான பிரிவுகள் உள்ளன.

அவை அதனை கண்டுப்பிடிக்கும்.  ஆகவே, அவர்கள் தங்களது ‍கடமைகளை செய்தால் கண்டுப்பிடிக்க முடியும். இது மிகப் பெரிய பிரச்சினை அல்ல. உண்மையிலேயே , ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு செயற்படுத்தினால் கண்டுபிடிக்கலாம். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right