(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எமக்கு வருமானத்தை பெற்றுத்தரும் வளங்கள் அனைத்தையும் சீனாவும் அமெரிக்காவும் அபகரித்துக்கொண்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கான துண்டுவிழும் தொகையை நிரப்ப சீனாவிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ சபையில் சுட்டிக்காட்டினார். 

Articles Tagged Under: விஜயதாச ராஜபக்ஷ | Virakesari.lk

அத்தோடு அடுத்து இடம்பெறும் தேர்தல் எதுவாக இருந்தாலும் மக்கள் ஆனையொன்றை உறுதிப்படுத்துவதாகவே அமையும். உடன்படிக்கை செய்து விற்கப்பட்ட சகல வளங்களையும் மீண்டும் நாமே பெற்றுக்கொள்ளும் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளும் தேர்தலாகவே இது அமையும் எனவும் அவர் சபையில் கூறினார்.

2021 ஆம் ஆண்டின் பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது உரையை இன்று, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நிகழ்த்திய போதே அவர் இதனை  கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் இதயத்தை சீனாவிற்கு விற்கப்பட்டுள்ளது, சுவாசப்பையை அமெரிக்காவிற்கு விற்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நாட்டுக்கு வந்து சுவாசப்பையை அமெரிக்கா பெற்று செல்கின்றது.

நுரையீரல் வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு எமது வளங்களை சர்வதேசத்திற்கு விற்கவா ஆட்சியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

இதற்கு ஆட்சியாளர்கள் எதற்கு. ஆட்சிக்கு வரும் வேளையில் ராஜபக்ஷ என்ன கூறினார். முதலாவதும் நாடு, இரண்டாவதும் நாடு, மூன்றாவதும் நாடு என நெஞ்சில்  அடித்து கூறினார். இன்று அவரது மனசாட்சி அவரை உஉருத்துமென்றே நினைகின்றேன்.

அடுத்ததாக இடம்பெறும் தேர்தலில், அது ஜனாதிபதி தேர்தலாக இருக்கலாம் அல்லது பாராளுமன்ற தேர்தலாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அது மக்கள் ஆனையொன்றை உறுதிப்படுத்துவதாகவே அமையும். உடன்படிக்கை செய்து விற்கப்பட்ட சகல வளங்களையும் மீண்டும் நாமே பெற்றுக்கொள்ளும் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளும் தேர்தலாகவே இது அமையும்.

சீனாவை போன்று அமெரிக்காவும் பலமான நாடு தான், ஆனால் இந்த ஆதிக்கங்களுக்கு கட்டுப்பட்டு எம்மால் மௌனமாக இருக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சமவாயதிற்கு அமைய அமெரிக்காவிற்கு இருக்கும் அதே அதிகாரமே எமக்குள் உள்ளது. நாம் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் எமது சுயாதீனத்தில் நாம் அமெரிக்காவிற்கோ அல்லது சீனாவிற்கோ இரண்டாம் பட்சமில்லை. ஊழல் மோசடிகள் மூலமாக கப்பம் பெற்று செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிராகரிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது.

இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் எடுக்கவில்லை என்றால் அது பாரிய பிரச்சினையாகும்.  சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும், மக்களினதும் புத்தி தெளிந்து எமக்கு இருக்கும் ஒரே தாய் நாட்டை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும். நாட்டை துண்டாடி பெரும் பணத்தை கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள். இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.