(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையிலும், முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் சூழ்ச்சியினாலும் இப்போதைக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என சபையில் தெரிவித்த மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபை தேர்தலை இன்றைய சூழ்நிலையில் நடத்த முடியாது, அதற்கு முன்னைய அரசாங்கமே காரணமாகும். ஜனநாயகம் குறித்து பேசுகின்றீர்கள், ஆனால் உங்களின் செயற்பாடுகள் காரணமாகவே மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதுள்ளது.
சிறுபான்மை கட்சிகளே ஆரம்பத்தில் இருந்து மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
அப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ வடக்கு கிழக்கிற்கு மாகாணசபை தேர்தலை நடத்தினார். தமிழர் பகுதியில் நிருவாக அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
ஆனால் நல்லாட்சியில் இந்த செயற்பாடுகள் முழுமையாக தடுக்கப்பட்டது. சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாது இரவு 10 மணிவரை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி சூழ்ச்சி செய்தீர்கள்.
அதன் தாக்கமே இப்போதுள்ள நிலைமை மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதுள்ளது, ஆனால் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவோம். அதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு, அது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எப்போதுமே மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமே அதிகாரத்தில் இருக்க வேண்டும், மாறாக ஆயுதத்தால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதை நாம் தொடர்ச்சியாக நம்புகின்றோம்.
அந்த நிலைப்பாட்டில் இருந்தே மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள், யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்ட பின்னர் எமது இராணுவ அதிகாரிகளை ஜெனிவாவிற்கு கொண்டு சென்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுத்தீர்கள். அவ்வாறு செயற்பட்ட அணியினரே எதிர்கட்சியினர். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM