சுபத்ரா
“இஸ்லாமிய தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு அப்பால் இந்தியாவிடம் இருந்து முழு அளவிலான புலனாய்வுத் தகவல் பகிர்வையே இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது”
இந்த மாத இறுதியில் ஓய்வுபெறப் போகும் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் தலைமையில் கோவா கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு, கடந்த 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள 12 நாடுகளின் கடற்படைகளைப் பிரதிநிதித்தும் செய்யும் வகையில்- கடற்படைத் தளபதிகள், கடற்படைத் தலைமை அதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்னவும்இந்தக் கருத்தரங்கில்பங்கேற்றிருந்தார்.
இந்தக் கருத்தரங்கின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியக் கடற்படைத் தளபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில்முக்கியமானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளும் இணங்கியிருக்கின்றன.
ஏற்கனவே, 2020ஆம் ஆண்டு கொழும்பில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர், மரியா டிடி ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில், இந்த புலனாய்வு தகவல் பரிமாற்றத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கான வழிமுறைகள் தற்போது ஆராயப்பட்டு, இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்திய கடற்படைகளுக்கு இடையிலான புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு நாடுகளுக்குமேமுக்கியமானது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-27
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM