'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற கொவிட் கொத்தணியை உருவாக்க எதிர்க்கட்சி முயற்சி - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 4

15 Nov, 2021 | 08:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு முரணாக போராட்டங்களை தீவிரப்படுத்தி எதிர்க்கட்சியினர் 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற  கொவிட் கொத்தணியை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

கொவிட் -19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்தால் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூற வேண்டும். சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் எதிர்தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுப்பது அவசியமாகும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: ரோஹித அபேகுணவர்தன | Virakesari.lk

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் கிராமங்களின் அபிவிருத்தியையும்,தேசிய உற்பத்திகளின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வரவு-செலவு திட்டத்தின் 65சதவீத பயன் கிராமங்களை இலக்காகக் கொண்டுள்ளது. கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் கொவிட் தாக்கத்தை எதிர்க் கொண்டுள்ளோம்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு பல சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டது அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்புக்களுக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் முன்வைக்கப்பட்டு;ள்ளது. நெருக்கடியான சூழ்நிலையை முகாமைத்துவம் செய்யும் வகையில் வரவு-செலவு திட்டத்தில் ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவி;ட் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்கத்தினரினதும், விவசாயிகளின் போராட்டங்களினாலும் மீண்டும் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ளது.

அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சியினர் கொழும்பை முற்றுகையிடுவதாக கூறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

எதிர்தரப்பினர் 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற கொவிட் கொத்தணியை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இனிவரும் நாட்களில் கொவிட் தொற்று தீவிரமடைந்தால் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூற வேண்டும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்திற்கு முரணாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45