இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கை - பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் அவதானம்

By T Yuwaraj

15 Nov, 2021 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை - பிரான்ஸ் இருதரப்பும் அவதானம் செலுத்தியுள்ளன.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெர்ட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதன் போது ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டது.

இது போன்ற வேலைத்திட்டங்கள் தற்போது இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தூதுவர் இதன் போது எடுத்துரைத்தார்.

அதற்கமைய முதற்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் 6000 பேரை தெரிவு செய்து , நவீன தொழிநுட்பத்தினைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மிச்லிங்க ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

பிரான்ஸ் நிதி அமைச்சின் நிதி மற்றும் தொழிநுட்ப சலுகையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த வேலைத்திட்டம் தொடர்பில் விரைவில் பெருந்தோட்டத்துறை அமைச்சும் , பிரான்ஸின் க்சபா நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளன.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் , இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33