மேல் மாகாணத்தில் தீவிர கண்காணிப்பில் பொலிஸார்

Published By: Gayathri

15 Nov, 2021 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்திற்குள் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பிலும், சுகாதார விதிமுறைகளை முற்றாக மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணிவரையான 2 மணித்தியாலங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பில் பேரூந்துகள், மக்கள் முகக்கவசம் அணிந்துள்ள முறைமை, காற்று குளிரூட்பட்ட பேரூந்துகள், சில்லறை விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை கடைகள், ஏனைய சிறு விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்குட்படுத்தப்பட்டன.



இந்த சுற்றிவளைப்பிற்காக 451 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது 860 பேரூந்துகளும், 207 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளும், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 1,245 பல்வேறு விற்பனை நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாமல் பயணித்த 318 பேரூந்துகள், 65 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும், 505 விற்பனை நிலை உரிமையாளர்களுக்கும் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07