realme - Daraz.lk டயமண்ட் கூட்டிணைவுடன் daraz 11/11 மற்றும் Black Friday சலுகைகள்

By Gayathri

15 Nov, 2021 | 02:26 PM
image

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான realme, இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் ஷொப்பிங் தளமான Daraz.lk உடன் கூட்டிணைந்து, இவ்வருடத்தின் Black Friday பருவத்தில் தவறவிட முடியாத மாபெரும் கழிவுகள், சலுகைகளுடனான விற்பனைகளை மேற்கொண்டுள்ளது.

realme தனது சலுகைகளை Daraz 11/11 விற்பனை மற்றும் Daraz Black Friday ஆகிய இரண்டிலும் வெளியிட்டது. Daraz 11/11 விற்பனையானது நவம்பர் 11ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 17ஆம் திகதி நிறைவடைகின்றது. Daraz Black Friday சலுகைகள் நவம்பர் 24 ஆரம்பித்து நவம்பர் 29 வரை தொடரும்.

அந்தவகையில், realme அதன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் AIoT சாதனங்கள் ஆகிய இரண்டு வகைகளையும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளுடன் இந்த பருவத்தில் இவ்விற்பனைகளில் பங்கேற்கிறது. 

பிரபலமான realme தயாரிப்புகளான C11 – 2021, C21Y, Buds Q2, Realme Watch2 ஆகிய Daraz 11/11 விற்பனை மற்றும் Daraz Black Friday தள்ளுபடியுககளுடன் விற்பனைக்கு வருகின்றன. 

எடுத்துக்காட்டாக, C21Y ஆனது 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்தை கொண்ட, அதே வகை வரம்பிற்குள் உள்ள கையடக்கத் தொலைபேசிகளில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் திறனைக் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.

realme Sri Lanka இன் சந்தைப்படுத்தல் தலைவர் ஷான் யான் (Shawn Yan) இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், "எமது இளைஞர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதன் மூலம், realme அதன் வர்த்தக சுலோகமான "Dare to Leap" உடன் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. 

realme தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த தரமான பொருட்களை மலிவு விலையில் வழங்குவதேயாகும். 

இலங்கையில் realme இன் வளர்ச்சியில் Daraz முக்கிய பங்காற்றியுள்ளது. Daraz Mall ஒன்லைன் விற்பனை கூடத்தில் realme 92% சாதகமான (positive) விற்பனையாளர் மதிப்பீட்டை  பெற்றுள்ளது. 

இது realme இரசிகர்கள் எமது சலுகைகளில் அடைந்த மகிழ்ச்சி மற்றும் திருப்தியை நிரூபிக்கிறது. சமீபத்தில் நிறைவடைந்த 'Daraz Million Desires' பிரசாரத்தில் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் வகைகளில் முதல் 3 இடங்களுக்குள் realme இடம் பிடித்திருந்தது. 

2021 ஜூலை இடம்பெற்ற Daraz Mobile Week சலுகைகளின்போது, realme C11-2021 கையடக்கத்தொலைபேசி “சிறந்த பிரபலமான ஸ்மார்ட்போன் மொடல்” ஆக தெரிவானது. 

சமீபத்தில் நிறைவடைந்த Daraz 5 வருட கொண்டாட்ட பிரசாரத்தில், realme C11 – 2021 ஆனது, கையடக்கத்தொலைபேசி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது." என்றார்.

குறிப்பாக realme சமீபத்தில் நிறைவடைந்த “Daraz Turns 5” பிரசாரத்திலும் டயமண்ட் கூட்டாளர் அந்தஸ்தைப் பெற்றிருந்தமை தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

“realme ஆனது, இணைய-வர்த்தகத்தின் மூலமான வளர்ச்சியை முக்கிய ஊடகமாகப் பார்ப்பதால். நாம் Daraz இனது எதிர்கால பிரசாரங்களிலும் அவர்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவோம்" என அதன் சந்தைப்படுத்தல் தலைவர் ஷான் யான் தெரிவிக்கிறார்.

realme பற்றி:

realme ஆனது வளர்ந்து வரும்  உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது புதிய தொழில்நுட்பங்களை மிக இலகுவாக அடையும் வகையிலான உற்பத்திகளை வழங்கி, ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு அவசிமான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியவாறு, காலத்திற்கு ஏற்ற போக்கில், சிறப்பான வடிவமைப்புகளுடன், இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறது. 

2018 ஆம் ஆண்டில் Sky Li இனால் நிறுவப்பட்டு, அதன் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) எனும் உயிர் நாடிக்கு ஏற்ப, realme ஆனது, உலகின் 6ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளதுடன், இரண்டே வருடங்களில் உலகளாவிய ரீதியில் 15 சந்தைகளில் சிறந்த 5 ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

2021 இன் இரண்டாம் காலாண்டு நிலவரப்படி, உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் realme ஆனது Counterpoint இன் ஸ்மார்ட்போன் தரவரிசையில் முதல் 6 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.

Daraz.lk பற்றி:

Daraz ஆனது தெற்காசியாவில் மாத்திரமல்லாது இலங்கையிலும் முன்னணி ஒன்லைன் சந்தையாக விளங்குகின்றது. 

2012 இல் ஆரம்பிக்கப்பட்ட இது, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகளில் துடிப்பாக இயங்கி வருகின்றது. 

பரந்துபட்ட பிரத்தியேகமான வகையில் வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல், தரவு, சேவைத் தீர்வுகளால் வலுவடைந்துள்ள Daraz, 30,000 விற்பனையாளர்களையும் realme உள்ளிட்ட 500 தரக்குறியீடுகளையும் கொண்டுள்ளதுடன், பிராந்தியத்தில் 5 மில்லியன் நுகர்வோருக்கு சேவையளித்தும் வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right