ஆர்.ராம்
சுன்னாகம் தபாலகம் மற்றும் தபால் அதிபர் தங்குமிடத்தை நிர்மாணிப்பதற்காக 2019 மார்ச் 19இல் 26.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் தற்போது வரையில் அந்நிர்மாணம் நிறைவு பெறவில்லை.
இந்த நிலைக்கு யாழ்.மாவட்ட அரச அதிகாரிகளின் விதிமுறைகளுக்கு முரணான நிர்வாக மற்றும் நிதி கையாளுகையே காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிர்மாணப்பணிகள் முறையாக இடம்பெறாமையால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய செய்யப்படாத வேலையின் பெறுமதியில் பெற வேண்டிய 25சதவீத தண்ட அறவீட்டுத்தொகையான 1,169,074ரூபாவும் இதுவரையில் பெறப்படாத நிலையும் வெளிப்பட்டுள்ளது.
இதனால் ஐந்து தாசப்தங்களாக நீடித்துக்கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு தற்போது வரையில் நிறைவேறாமையால் ஏமாற்றத்துடன் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர் பிரதேசவாசிகள்.
யாழ்.மாவட்டத் தலைமைத் தபாலகத்திற்கு அடுத்ததாக வலிகாம் பகுதி நோக்கி நகருகையில், கொக்குவிலில் பிரதம தபாலகமொன்று இயங்குகிறது. அதற்கு அடுத்து கோண்டாவில், இணுவில், தாவடி, சுன்னாகம், மருதனார்மடம், உடுவில் போன்ற பகுதி மக்களுக்காக பிரதம தபாலகமொன்று இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
இதனால், தபால் சேவைகளை, ஓய்வூதியத்தை, அரச நிதி உதவிகளைப் பெறும் பெண்தலைமைகள் உள்ளிட்டவர்கள் நீண்ட வரிசையில் சுன்னாகத்தில் இருக்கும் சிறிய தபாலகத்தில் காத்திருக்க வேண்டிய அவலமான நிலைமை தொடருகின்றது.
முன்னதாக இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கு திடசங்கற்பம் கொண்ட பிரதேசவாசிகள் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த விஸ்வநாதன் தருமலிங்கத்திடம் நிரந்த காணியில் கட்டடத்தைக் கொண்ட தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான கோரிக்கைகளை 70களில் முன்வைத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட விஸ்வநாதன் தருமலிங்கம் சுன்னாகம் தபாலகத்திற்கு நிரந்தரமான காணியும், கட்டடத் தொகுதியில் அமைக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார். இருப்பினும் அவரது காலத்தில் அம்முயற்சி வெற்றியடைந்திருக்கவில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-14#page-16
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM