கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதியூடான போக்குவரத்து மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொடர் மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி குறித்த வீதி மூடப்பட்டது.

இந் நிலையில் இவ் வீதி திறப்பு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கேகாலை மாவட்ட செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.