உடவலவ - தெற்கு அதிவேக பாதையில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 24 வயதுடைய உடவலவ பகுதியைச் சேர்ந்தவரென  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவலவ பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியொன்று கார் ஒன்ருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.