எகிப்தில் படையெடுக்கும் தேள்கள் ! - 3 பேர் பலி, 500 க்கும் மேற்பட்டோர் காயம் !

Published By: Gayathri

15 Nov, 2021 | 11:24 AM
image

எகிப்தில் தேள்fள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகின்றதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய பண்ணைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனால், கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், குறித்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கலித் கபார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிகிச்சைபெற்று வந்தவர்களில் சிலர் சிகிச்சைபெற்று வீடுதிரும்பி வருவதாகவும் தேள்களின் நடமாட்டம் வீதிகளில் அதிகரித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04
news-image

 வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  ...

2023-09-21 10:45:26