அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளரும் அவருக்கு அடைக்கலம் அளித்த நபரும் பெங்களூருவில் கைது

Published By: Vishnu

17 Nov, 2021 | 11:30 AM
image

கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் மாரடைப்பால் உயிரிழந்த இலங்கை பாதாள உலக குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளரும், அவருக்கு அடைக்கலம் அளித்த நபரும் கர்நாடகாவின் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் கைதுசெய்த சி.பி.சி.ஐ.டி., பொலிஸார், அவர்களை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதன்போது நீதிபதி உத்தரவின் கீழ் இருகூரம் பெருந்துறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் பாதால உலக குழுவின் தலைவராக இருந்த அங்கொட லொக்கா, கோவை சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் இரகசியமாக வசித்து வந்தார். 

திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 3 ஆம் திகதி உயிரிழந்தார். 

கோவை அரசு வைத்தியசாலையில் போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.

அதன் பின்னர் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கையில் ஒப்படைக்கப்பட்டது. 

அவர்களது விசாரணையில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அங்கொட லொக்காவுக்கு இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை, கோவை சி.பி.சி.ஐ.டி, பொலிஸார் தேடி வந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02