நாட்டில் நேற்று சனிக்கிழமை 23 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 995 ஆக உயர்வடைந்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 17 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.