ஹிக்கடுவை பகுதியிலுள்ள சுற்றுலா  விடுதியொன்றிலிருந்து  தூக்கிலிட்டு உயிரிழந்தவாறு இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (23) இரவு குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் கோனபினுவல  பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் நேற்று விடுதிக்கு வந்துள்ள நிலையில், இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி ஊழியர் பொலிஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.