இராஜதுரை ஹஷான்
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தில் தற்காலிக வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளோம்.
சுபோதினி குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தும் வரை போராடுவோம்.
அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதி மீது எமக்கு நம்பிக்கை கிடையாது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆசிரியர்-அதிபர்களின் சம்பளம் அதிகரிக்காமல் ஏதேனும் இழுபறி நிலை காணப்பட்டால் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசிரியர் -அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள சுமார் 4மாத காலமாக தொடரும் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தில் தற்காலிக வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளோம்.
1997ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கிக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுபோதினி குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமைப்படுத்தல் பிரதான இலக்காக காணப்படுகிறது.
ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி கடந்த ஜுலை மாதம்12ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்தோம்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் ஆராய அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவை நியமித்தது.ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அமைச்சரவை உபகுழு அறிக்கை சமர்ப்பித்தது.
ஆசிரியர்- அதிபர் சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் வழங்குவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
சுமார் நான்கு மாத காலமாக தொடந்த போராட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு உத்திகளை பிரயோகித்தது.
தொழிற்சங்கத்தினரது உரிமைக்கான போராட்டத்தை முடக்க அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
உறுதியான கொள்கை காரணமாக அரசாங்கத்தை அடிபணிய வைத்தோம்.சரியான திட்டமிடல் காரணமாக போராட்டத்தில் தற்காலிக வெற்றிப் பெற்றுள்ளோம்.எமது போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதில் சந்தேகம் காணப்படுகிறது. ஏனெனில் ஆட்சியாளர்கள் மீது அந்தளவிற்கு நம்பிக்கை உள்ளது.
மூன்றில் ஒருபகுதி சம்பள அதிகரிப்பிற்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆசிரியர்களின் சம்பளம் 3,500 தொடக்கம் 11,000 ரூபா வரையிலும்,அதிபர்களின் சம்பளம் 6,000 தொடக்கம் 12,000 வரையிலும் வைப்பிலிடாவிடின் மீண்டும் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்.சுபோதினி குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தும் வரையில் தொடர்ந்து ஒன்றினைந்து போராடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM