சர்வதேச விருது விழாக்களைக் சிறப்பிக்கும் ஈழத்துத் திரைப்படம் "வெந்து தணிந்தது காடு''

Published By: Digital Desk 2

14 Nov, 2021 | 02:24 PM
image

சர்வதேச விருது விழாக்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஈழத்துத் திரைப்படம் "வெந்து தணிந்தது காடு''

ஈழத்திற்கு என்றொரு சினிமா தேடும் போராட்டத்தில் இடம் பெறும் முயற்சிகளில் பெரு வெற்றியாக ஒரு திரைப்படம் தன் கால் தடத்தை பதிக்க ஆரம்பித்திருக்கின்றது. 

"வெந்து தணிந்தது காடு" என்ற பெயரில் குழுப் பணச்சேர்ப்பு முறையில் மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் பணத்தை சேகரித்த ஈழத்தைச் சேர்ந்த இயக்குனரான மதிசுதா என்பவரின், இரண்டரை வருட முயற்சியில் இத்திரைப்படம் உருவாக்கி முடித்திருக்கின்றார்.

மிக குறைந்த பணச் செலவில் முற்றுமுழுதாக ஐபோன் கைப்பேசியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது பல சர்வதேச விழாக்களில் ஈழசினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தி கொண்டு இருக்கின்றது. 

கடந்த வாரம் பிரான்சில் இடம்பெற்ற அவர் Auber film festival இல் சிறந்த உண்மைத் திரைக்கதைக்கான (Best original screenplay) விருதை பெற்றிருந்த இத்திரைப்படமானது.  

இந்த வாரம் இந்தியாவில்  இடம்பெற்ற  Golden sparrow விருது விழாவில் இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றுக் கொடுத்து இருக்கின்றது. 

சிறந்த அறிமுக திரைப்படம் மற்றும் அறிமுக இயக்குனருக்கான விருதுடன் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற விருதையும் பெற்றிருக்கின்றது.

இத்திரைப்பட முயற்சி வெற்றிபெறும் ஆக இருந்தால் இனிமேல் ஈழத்தில் உள்ள கதைகளை சொல்வதற்கு இங்குள்ள படைப்பாளிகள் தயாரிப்பாளரைத் தங்கி நிற்கத் தேவையில்லை இப்படியான குழுப் பணச் சேர்ப்பு முறையிலேயே திரைப்படத்தை உருவாக்கலாம் என இத்திரைப்படத்தின் இயக்குனர் மதிசுதா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

"வெந்து தணிந்தது காடு" என்ற இதே தலைப்பில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் ஒரு திரைப்படத்தை நடித்துக்கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். 

சில மாதங்களுக்கு முன் அத்திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது ஈழத்து இயக்குனரான மதிசுதா விற்கும் தென்னிந்திய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று சுமுகமான நிலையில் இரு திரைப்படங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17