பெண் தொழில்முனைவோரின் நன்மைக்காக அமெரிக்கா 150 மில்லியன் டொலர் நிதியுதவி

Published By: Vishnu

14 Nov, 2021 | 12:15 PM
image

இலங்கையின் சமூகம் சார்ந்த வணிகங்களின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக அமெரிக்க அரசாங்கம் நவம்பர் 12 அன்று DFCC வங்கிக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியது. 

இது இலங்கைக்கான அமெரிக்க அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தால் (DFC) வழங்கும் மிகப்பெரிய கடன் வழங்கல் ஆகும்.

மேலும் இது உள்ளூர் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) துறைக்கு, குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்க வடிவமைக்கப்பட்ட 265 மில்லியன் டொலர் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். 

இந்த பங்காளித்துவத்தின் ஊடாக, DFCC வங்கி முன்னுரிமைத் துறைகளில் கடன் வழங்கல் தீர்வுகளை வழங்கும் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்கு ஆதரவளிக்கும். 

குறிப்பாக பெண்களின் தொழில் முயற்சியை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளை மேம்படுத்தும். பெண் தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றான நிதியுதவிக்கான வரையறுக்கப்பட்ட அணுகலைச் சமாளிப்பதற்கு இது உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27