திருகோணமலை முகாமில் உள்ள கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளர்.

குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி, பல்லேகலையைச் சேர்ந்த அனுர நிசாந்த குமார (36) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.