அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஓடும் புகையிரத த்துக்கு முன்பாக தனது 3 வயது மகளுடன் தாயொருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சர்வ தேச ஊடகங்கள் வெள்ளிக்கி ழமை புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டுள் ளன.

அர்ச்சனா கன்னத் (30 வயது) பெண்ணே தனது சின்னஞ்சிறு மகளான ஸ்ரேயாவுடன் சிட்னி நகரின் மேற்கேயுள்ள ஹரிஸ் பார்க் புகையிரத நிலையத்தில் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அர்ச்சனா உயிரிழந்த போதும் அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளார்.

ஸ்ரேயா தற் போது மருத்துவ மனையில் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்துக்கு 4 நாட்களுக்கு முன்னரே அர்ச்சனாவும் அவரது கணவர் சுஜித் வெய்ககாரவும் தமது ஐந்தாவது திருமண விழாவை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவம் குறித்து பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.