இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்கு நாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Image

அசலங்க தலைமையிலான இலங்கை அணியில் 15 வீரர்கள் உள்ளனர். 

அதன்படி பதும் நிசங்க, ஓஷத பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, மினோட் பானுக, சமிக்க கருணாரத்ன, அசித்த பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் நான்கு நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

அசலங்க இந்த களத்திலும் துடுப்பாட்ட வீரராக தனது தொடர்ச்சியான பணிகளை தக்கவைத்துக்கொள்ளும் பட்சத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இம் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் சோபிப்பதற்கு அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அவருடன் பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான நான்கு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் 98 ஓட்டங்கள் எடுத்த கமில் மிஸ்ராவும் இணைந்துள்ளார். 

இவரைத் தவிர பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வலது கை வேகப்பந்து வீச்சாளர் சமிக குணசேகரவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடருக்கு முந்தைய நான்கு நாள் டெஸ்ட் தொடரானது நவம்பர் 14-17 ஆம் திகதி வரை கொழும்பு. எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெறும்.