(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சமாதானதத்னையும் தேசிய பாதுகாப்பினையும் இலங்கையில் நாம் உறுதியாக ஒருங்கிணைத்திருக்கின்றோம். நாட்டில் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் இனிமேலும் இடமில்லை என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.
பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது நிதி அமைச்சர் இக்கருத்துக்களை முன்வைத்தார். அவர் கூறுகையில்,
இப்பிராந்தியத்தில் உயர்ந்த ஜனநாயக அரசியல் ஸ்திரத்தன்மையுடன் கூடிய நாடு எமது நாடாகும். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியொருவர் இருக்கின்றார். அந்த ஜனாதிபதி நேர்மையான, உறுதியான தீர்மானமெடுக்கும், ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்தினை ஒழிக்கின்ற எளிமையான தலைவராவார். இது எமது எதிர்கால பயணத்திற்கான மன ஆறுதல் என்பதுடன் உந்து சக்தியுமாகும். அதேபோன்று எமக்கு மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பாண்மையும் காணப்படுகின்றது.
இந்த பாராளுமன்றத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவது ஆசியாவின் மிகவும் முதிர்ச்சியுற்ற அரசியல் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அவர்களாவார். அவர் இந்நாட்டுக்கு அதி விசேடமான பணிகளை புரிந்த தலைவராவார். இதற்கு மேலதிகமாக, எமது நாடு சுயாதீனமான நீதித்துறையினையும் விழுமியங்களைக் கொண்ட அரசாங்க சேவையையும் கொண்டுள்ளது. நீதித்துறை மற்றும் அரசாங்க சேவை இரண்டும் இதற்கு முன்னரைப் போன்றல்லாது இன்று நாம் பெருமைப்படக்கூடியதாக உள்ளன.
சமாதானதத்னையும் தேசிய பாதுகாப்பினையும் இலங்கையில் நாம் உறுதியாக ஒருங்கிணைத்திருக்கின்றோம். நாட்டில் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் இனிமேலும் இடமில்லை. இன்று எமது நாடு உலகிலுள்ள மிகவும் சமாதானம் மிக்க உறுதியான நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சமாதானத்தின் நன்மை கருதி நாம் தற்போது அறுவடை செய்கின்றோம்.
பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலமொன்றினைக் கட்டியெழுப்புவதற்கான இயலுமையை நாம் கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உலகளவிலான சில அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதனை அவதானத்தில் கொண்டுள்ளோம். அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதும் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதும் எமது முதற்பொறுப்பு என நாம் கருதுகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM